
* யாரிற்கும் விலை போகாத, ஆர்ப்பாட்டம் இன்றி இலைமறைகாயாக தமிழ் தேசியத்திற்காக நீங்கள் உயிரினும் மேலாக நேசித்தவர்களுடன் இணைந்து தமிழ் தேசியத்திற்காக பாடுபடுபவர்.
* இவரிற்கு தமிழ் தேசியத்தின் மீதான பற்று இன்று நேற்று தோன்றியதல்ல. கடந்த காலங்களில் தென்னிலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரங்களின் பாதிப்பைத் தொடர்ந்து தாய் மண்ணில் சுயமாக தொழில் புரிய வேண்டும் என்ற கொள்கைக்காகப் பேராதனைப் பல்கலைக்கழக பொருளியல் துறை விரிவுரையாளர் எனும் பதவியினை துச்சமென தூக்கி எறிந்து தன் தமிழ்ப் பற்றை வெளிப்படுத்தியவர்.
* அன்றிலிருந்து இன்றுவரை எவரிற்கும் அடிபணிந்து நாட்டை விட்டு, மக்களை, தமிழ்ப்பற்றை விட்டு ஓடாது எமது மாணவர் கல்வி முன்னேற்றத்திற்கு வழி சமைத்துக் கொண்டிருப்பவர்.
* இவர் தமிழ் தேசத்தை நேசித்த போதும் மாணவரை கல்வி நோக்கில் மட்டும் வழி நடத்தியவர்.
* தமிழ்த் தேசியத்தைத் தீவிரமாக நேசித்ததன் விளைவாக
* 1988 ம் ஆண்டு இந்திய ராணுவத்தின் சிறையிலிருந்தவர்.
* 1997 - 1998 காலப்பகுதியில் 4 ம் மாடி, 6 ம் மாடி, மற்றும் களுத்துறைச் சிறைகளில் சித்திரவதைகளை அனுபவித்தவர்.
* 2008 ம் ஆண்டு வெள்ளை வானில் கடத்தப்பட்டு ஒரு மாதத்தின் பின்னர் விடுதலையானவர்.
* இவற்றைப் பயன்படுத்தி வெளிநாடுகளில் புகலிடம் கோரிச் செல்லாமல் - இவ்வளவு பிரச்சினைகளுக்கு மத்தியிலும் தனது குடும்பத்தோடு தாய் மண்ணில் தொடர்ந்து வாழ்பவர்.
*தமிழ் மக்கள் அனுபவித்த அனைத்துப் பிரச்சினைகளையும் தானும் அனுபவித்து அவர்களோடு தொடர்ந்து வாழ்பவர்.
இவ்வளவு காலமும் இலைமறை காயாக இருந்தவர் இன்று மக்கள் முன் தன்னை வெளிப்படுத்த துணிவு கொண்டது ஏன்?
*இன்று தமிழினம் சரியான தலைமைத்துவம் இன்றித் தவிப்பது யாவரும் அறிந்ததே ஆகவே மக்களை தமிழ்த்தேசியம் நோக்கி ஓரணியில் அனைவரையும் வழிப்படுத்த சுயநலமற்ற என்றும் ஒரே கொள்கை, ஒரே கோட்ப்பாடு கொண்ட - யாரிற்க்கும் விலை போகாத அடிபணியாத வழிகாட்டியாக உங்கள் முன் தோன்றுகிறார்.
* தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளையும் அறிந்த - அனுபவித்த இவரைத்தவிர உங்களின் தெரிவு யாராக இருக்க முடியும்?
No comments:
Post a Comment