Monday, March 15, 2010

அன்பான பழைய மாணவர்களுக்கும் நலன் விரும்பிகளுக்கும் தமிழ்த் தேசியத்தை நேசிப்பவர்களுக்கும்


நலம், நலமே வாழ்க. தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி. தேர்தல் வேலை நெருக்கடி காரணமாக உடனடியாக உங்களோடு தொடர்பு கொள்ள முடியவில்லை. மன்னிக்கவும்.

தாயகத்தின் இன்றைய சூழ்நிலையில் தவிர்க்க முடியாத ஒரு நிகழ்வாக எனது அரசியல் பிரவேசம் அமைந்து விட்டது. இதுவரை காலமும் ஒரு அரசியல் நடவடிக்கையாளனாக மட்டுமே இருந்த நான், இன்று ஒரு அரசியல்வாதியாக மாறவேண்டிய ஒரு தேவை - கட்டாயம் ஏற்பட்டுவிட்டது.

விடுதலைப் புலிகளின் அரசியற் போராட்ட சக்தியாக உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, விடுதலைப் புலிகள் பலமிழந்த பின்னர் தடம்புரள ஆரம்பித்தது. இன்று கூட்டமைப்பு தனது பெயரில் மட்டுமே தமிழ்த் தேசியத்தைக் கொண்டுள்ளது. தற்போது இதன் கீழ் அணி திரண்டிருப்பவர்கள் அனைவரும் தமிழ்த் தேசியத்திற்கு எதிரானவர்கள். தாயகம், சுயநிர்ணய உரிமை போன்றவற்றை மக்களைக் கவர்வதற்கான வெறும் கோஷங்களாக மட்டுமே முன்வைப்பார்கள்.

தமிழர்களை ஒரு தோற்றுப்போன சமூகமாகக் காட்டி இனி தருவதை வாங்கிக்கொண்டு அதனோடு திருப்திப்படவேண்டியது தான் என்ற தாழ்வு மனோநிலைக்கு எமது இனத்தைத் தள்ளுகின்ற முயற்சியில் இவர்கள் ஈடுபடுகின்றனர். எமது மக்களின் இன்றைய அவலங்களுக்குக் காரணமாக இருந்த இந்தியாவைத் திருப்திப்படுத்தி தமது தேவைகளைப் பூர்த்தி செய்வதே இவர்களது நோக்கம். இதனை நிறைவேற்றுவதனை இலக்காகக் கொண்டு அதற்குத் துணை போகக் கூடியவர்களை மட்டுமே கூட்டமைப்பு தனது வேட்பாளர்களாகத் தெரிவு செய்துள்ளது.

சர்வதேசத்தில் புலம்பெயர் தமிழர்கள் எமது தாயக விடுதலையை நோக்கிய இராஜதந்திர நகர்வுகளை மேற்கொண்டுவரும் இக்காலகட்டத்தில் அதற்கு முரணான எதிர்த்திசையில் கூட்டமைப்பு தனது நகர்வுகளை மேற்கொள்கின்றது. புலம்பெயர் தமிழர்கள் எமது விடுதலைத் தீயை அணையவிடாமல் செயற்பட்டுக்கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் தாயகத்தில் இவ்விடுதலைத் தீயை அணைக்கும் முயற்சியில் கூட்டமைப்பு ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றது.
இச் சூழ்நிலையிலேயே நான் தீவிர அரசியலில் இறங்க வேண்டிய ஒரு தேவை ஏற்பட்டது. எமது தாயகத்தில் விடுதலை உணர்வை மங்க விடாமல் தக்கவைத்துக் கொள்ளவேண்டிய தேவை தற்போது உள்ளது. "நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மாந்தரை நினைத்துவிட்டால்" என்ற பாரதியாரின் வரி நினைவிற்கு வருகின்றது. "இனியொரு விதி செய்வோம்" என்ற அதே பாரதியாரின் வரிக்கேற்ப எனது அரசியற் போராட்டத்தின் மற்றுமொரு கட்டமே இன்றைய பாராளுமன்ற அரசியற் பிரவேசம்.

ஆனால் இதற்குள் இறங்கிய போதுதான் எம்முன்னுள்ள தடைகள் - நெருக்கடிகளைக் காணக் கூடியதாகவுள்ளது. அனைத்து ஊடகங்களும் எமக்கு எதிராகவே செயற்படுகின்றன. எம்மை இருட்டடிப்புச் செய்கின்றன. எனினும் "தடைகளையும் நெருக்கடிகளையும் கண்டு தனது இலட்சியத்தை மாற்றிக்கொள்பவன், எதனையும் அடையப்போவதில்லை"

எமக்கு எதிரான பாரிய பிரச்சாரப் போரினை முறியடிப்பதற்கு தங்களின் உதவியை நாடி நிற்கின்றேன். என்னுடைய ஏராளமான மாணவர்கள் - நலன்விரும்பிகள் பல நாடுகளில் பரந்துள்ளனர். ஆனால் அவர்களோடு எனக்குத் தொடர்புகள் இல்லை. எனவே அவர்களோடு எவ்வாறு தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளலாம். என்ற பொறிமுறையினை அறியத்தரவும். உங்களோடு தொடர்புள்ளவர்களில் யாராவது என்னுடைய மாணவர்கள் இருந்தால் அவர்களை என்னுடன் தொடர்பு படுத்தி விடுங்கள்.

இரண்டாவதாக நிதி ஒரு பாரிய பிரச்சினையாக உள்ளது. நான் ஒரு தனி மனிதனாகவே இத்தேர்தலில் போட்டியிடுகின்றேன். மேலும் நான் சார்ந்து நிற்கின்ற கட்சி பெரிய நிதி வசதியுடையதுமல்ல. எனவே இத்தேர்தல் செயற்பாட்டிற்கு ஏற்படும் செலவுக்கான நிதியை புலம்பெயர் எம்மவர்களிடமிருந்தே எதிர்பார்க்கிறேன். "சிறு துளி பேரு வெள்ளம்" என்ற அடிப்படையில் இவ் உதவியை உங்களிடம் எதிர்பார்க்கிறேன். எனவே தங்களைப் போன்று தமிழ்த் தேசிய உணர்வோடு இருக்கின்ற எனது பழைய மாணவர்கள் இவ்விடயத்தில் உதவி செய்யவேண்டும் என எதிர்பார்க்கிறேன். அவசரமானதும் அவசியமானதுமான ஓர் உதவியாக இதனை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.

எனது வங்கி கணக்கு பற்றிய விபரங்கள்.


பெயர் - சின்னத்துரை வரதராஜன் (Mr . Sinnathurai Varatharajan)
முகவரி - 215 பழைய பூங்கா வீதி, யாழ்ப்பாணம். ( No .215 Old Park Road,Jaffna )
வங்கி - கொமர்ஷல் வங்கி - ( Commercial Bank - Jaffna )
கணக்கிலக்கம் - 8127011430

இத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும்? வெற்றியடைவதற்கு என்ன வழிமுறைகளைக் கையாள வேண்டும்? என்பன தொடர்பான தங்களின் ஆலோசனைகளை எதிர்பார்க்கிறேன்.

இத் தகவலை உங்களோடு தொடர்புடைய என்னுடைய பழைய மாணவர்களுக்கும் நலன் விரும்பிகளுக்கும் தமிழ்த் தேசியத்தை நேசிப்பவர்களுக்கும் அறியத்தரவும்.

என்னை தொடர்பு கொள்வதற்கு-

முகவரி - 215 பழைய பூங்கா வீதி, யாழ்ப்பாணம். ( No .215 , Old Park Road , Jaffna )
e-mail id - varatharajaninfo@gmail.com
தொலைபேசி -0094778039518 - (Hand Phone )
-0094217451755 - (Land Phone )

உங்கள் அனைத்து ஆதரவுகளுக்கும் எனது மனமார்ந்த நன்றி.
சி . வரதராஜன்.

No comments: